ஆகஸ்ட் 30 – கடந்த வாரம் மும்பாயில் நடந்தேறிய, பிரசித்தி பெற்ற, லக்மே (Lakme) அலங்கார அணிவகுப்பில் பல அழகு நங்கையர் பவனி வந்து அந்த நிகழ்ச்சியை வண்ணமயமாக்கினர்.
அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான லக்மே கடந்த ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 24 வரை மும்பாயில் இந்த அலங்கார அணிவகுப்பை நடத்தியது.
குளிர்கால மற்றும் பெருநாள் ஆடைகளில் நவீன வடிவமைப்புகளை இந்த அலங்கார பவனிகள் எடுத்துக் காட்டின.
அந்த அழகு மாடல்களின் அலங்கார பவனிகளில் சில – இதோ உங்களின் பார்வைக்கு:
‘ஏக்ரு’ (Ekru) என்ற வணிக முத்திரை கொண்ட ஆடைகளை அணிந்து அணிவகுத்து நிற்கும் அழகு மங்கையர். இவை ஏக்தா ஜெய்பூரா மற்றும் ருச்சிரா கண்டாரி ஆகியோரின் சிந்தனையில் உதித்த வடிவமைப்பாகும்.
இந்திய வடிவமைப்பாளர் பூர்வி டோஷி என்பவரின் எண்ணத்தில் உதித்த ஆடையை அணிந்து காட்டும் அழகி ஒருத்தி…
பூர்வி டோஷியின் ஆடை வடிவமைப்பு ஒன்றை அணிந்து காட்டும் நங்கை…
ஆடைகளில் எத்தனை நவீனமயமாக்கல் வந்தாலும் பகட்டான பட்டு சேலைக்கு ஈடு இணை உண்டோ? கவுரங் ஷாவின் வடிவமைப்பில் உருவான சேலையொன்றை அணிந்து அழகு காட்டும் அழகி…
பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த அழகான சேலை –
-Photos EPA