Home நாடு “சீனி ஐயாவின் படைப்புகளை மின்னியல் பதிவு மூலம் நிரந்தர ஆவணங்களாக்குவோம்” – முத்து நெடுமாறன்  

“சீனி ஐயாவின் படைப்புகளை மின்னியல் பதிவு மூலம் நிரந்தர ஆவணங்களாக்குவோம்” – முத்து நெடுமாறன்  

1079
0
SHARE
Ad

IMG_2785

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 30 –  ‘செல்லியல்’ தகவல் ஊடகத்தின் சார்பில் அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகளை மின்னியல் பதிவுகளாக இணையத் தளத்தில் பதிவேற்றும் திட்டத்தை செல்லியல், செல்லினம் தளங்களின் தொழில் நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்துரைத்த முத்து நெடுமாறன், தான் நீண்டகாலம் சீனி ஐயாவுடன் பழகியதாகவும், அதன் மூலம் தனது தமிழறிவை மேலும் கூர்மைப் படுத்திக் கொள்ளவும், விரிவாக்கிக் கொள்ளவும் தன்னால் முடிந்தது என்றும், அதன் பிரதிபலனாக தொழில் நுட்ப ரீதியாக இந்த திட்டத்தை செயல்படுத்த தான் முன்வந்ததாகவும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“காலத்தே பயிர் செய்ய வேண்டும் என்பது போல, சீனி ஐயாவின் நினைவுகளில் நாம் மூழ்கியிருக்கும் இந்த கால கட்டத்திலேயே அன்னார் கைவண்ணத்தில் உருவான படைப்புகளை இணையத் தளங்களில் பதிவேற்றம் செய்யவும், அவர் நடத்திய பத்திரிக்கை உள்ளிட்ட அவரது எழுத்துலகப் படைப்புகளை மின்னியல் பதிப்புகளாக உருமாற்றும் முயற்சிகளிலும் ஈடுபட முன்வந்தேன்” எனவும் முத்து நெடுமாறன் இந்தத் திட்டத்தில் தனது பங்களிப்பு குறித்து தெரிவித்தார்.

“மிகவும் மதிப்பு வாய்ந்த சீனி ஐயாவின் கருத்தோவியங்கள் நிரந்தரமான ஆவணங்களாக்கப்பட வேண்டும் அதன்மூலம் எதிர்கால சந்ததியினரும் பயனடைய வேண்டும்” என்பதும் தனது நோக்கம் என முத்து நெடுமாறன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் வெற்றிக்காக முதல் கட்டமாக, தனது சொந்த நன்கொடையாக 10,000 மலேசிய ரிங்கிட் வழங்கவிருப்பதாகவும் முத்து நெடுமாறன் அறிவித்துள்ளார்.

சீனி நைனா முகம்மதுவின் அரிய எழுத்துப் படிவங்களை மின்னியல் பதிவுகளாக்கி இணையத்தில் பதிவேற்றும் திட்டத்திற்கு முத்து நெடுமாறன் பொறுப்பேற்றுள்ளார்.

முத்து நெடுமாறன் சீனி ஐயாவின் படைப்புகளை மின்னியல் பதிவுகளாக்கும் திட்டம் குறித்து வழங்கிய காணொளி நேர்காணலை கீழ்க்காணும் இணைப்பின் வழி காணலாம்.