Home நாடு இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது – 7ஆம் ஆண்டு நினைவு நாள் இயங்கலை நிகழ்ச்சி

இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது – 7ஆம் ஆண்டு நினைவு நாள் இயங்கலை நிகழ்ச்சி

2331
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய இலக்கிய உலகில் தனக்கென்று தனி இடத்தை வைத்திருந்த தொல்காப்பியச் செம்மல் இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது மறைந்து இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

மலேசிய தமிழர்கள் மத்தியில் தமிழையும் இலக்கண இலக்கியத்தையும் கொண்டு சேர்ப்பதில் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இறையருட் கவிஞர், செ.சீனி நைனா முகம்மது.

அவருடைய உங்கள் குரல் மாத இதழ் மலேசிய தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. பலருடைய தமிழ் தாகத்தை தீர்ப்பதாக அது அமைந்தது.

#TamilSchoolmychoice

அவருடைய தமிழ் வகுப்புகள் மாநிலம் தோறும் நடத்தப்பெற்றன. அதன் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் பயனடைந்தார்கள்.

அவருடைய மரபுக்கவிதைகள் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் அமைத்திருக்கும். அவருடைய இசைப் பாடல்கள் அனைவரது நெஞ்சையும் தொடும்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்காக கவிஞர் சீனி இயற்றிய தமிழ் வாழ்த்து அவர் புகழை என்றென்றும் நிலை நிறுத்தும்.

ம.இ.கா முன்னாள் தலைவர் துன் சாமிவேலுவும் இன்றைய மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணனும் முன்னின்று இறையருட் கவிஞர், செ.சீனி நைனா முகம்மதின் ‘தேன்கூடு’ கவிதை நூலை வெளியிட்டு அவர் உயிரோடு இருக்கும்போதே அவருக்கு சிறப்பு சேர்ப்பித்தனர்.

சென்னை கவிக்கோ மன்றத்தில் இறையருட் கவிஞர், செ.சீனி நைனா முகம்மது அவர்களின் திருஉருவப் படத்தை ஓவியமாக வரைந்து சிறப்பு சேர்த்துள்ளார் தமிழ் நெஞ்சர் முஸ்தபா.

அந்த சிறப்பான கவிஞருக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக இன்று இயங்கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்.

நாள் : 07/08/2021 (சனி)
நேரம் : இரவு மணி 8.00 – 9.00
இணைப்புச்சுட்டி :
https://meet.google.com/qqg-cdhj-msk

தொடர்புக்கு :
சு. இரவிசந்திரன் (013-7689379)
பிரபு ( 016-5478113)