Home நாடு நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி – அன்வாரிடம் 2 மணி நேரம் காவல் துறை விசாரணை

நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி – அன்வாரிடம் 2 மணி நேரம் காவல் துறை விசாரணை

1093
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் இருந்து நாடாளுமன்றக் கட்டடம் நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணி ஒன்றை நடத்தினர்.

இதனை சட்டவிரோதப் பேரணி எனக் கூறியிருக்கும் காவல் துறை இதன் தொடர்பில் பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிமிடத்திலும், அவரின் மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அசிசா வான் இஸ்மாயிலிடமும் சுமார் 2 மணிநேரம் காவல் துறை இன்று சனிக்கிழமை காலை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சி அலுவலகத்திற்கு இன்று காலை வந்த காவல் துறை அதிகாரிகள் அன்வார் இப்ராகிமிடமும் அவரின் மனைவியிடமும் இந்த வாக்குமூலத்தைப் பெற்றனர்.

நாடாளுமன்றம் நோக்கி நடத்தப்பட்ட பேரணி

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை  முற்றுகையிட்டனர்.

எனினும் நாடாளுமன்றக் கட்டடத்தின் வாயில்கள் மூடப்பட்டு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் அவர்கள் திரண்டனர். அங்கிருந்து பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி நடந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தில் துன் மகாதீரும், அன்வார் இப்ராகிமும் கலந்து கொண்டனர்.