Home நாடு அம்னோவுக்கு சிக்கல் : தேர்தலை நடத்தியாக வேண்டும்

அம்னோவுக்கு சிக்கல் : தேர்தலை நடத்தியாக வேண்டும்

576
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மொகிதின் யாசினின் அரசாங்கத்தை வீழ்த்துவதில் மும்முரம் காட்டிவரும் அம்னோவின் போராட்டத்திற்கு புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற வேண்டிய அம்னோவின் கட்சித் தேர்தல்களை அடுத்த 18 மாதங்களுக்கு ஒத்தி வைக்கும் முடிவை எடுத்த அம்னோ உச்ச மன்றம், அந்த முடிவை சங்கப் பதிவிலாகாவுக்கும் முறையாகத் தெரிவித்தது.

எனினும் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என சங்கப் பதிவிலாகா அம்னோவுக்கு பதில் அனுப்பியுள்ளது.

#TamilSchoolmychoice

2018-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் இந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதியோடு முடிவடைகிறது. எனவே, அதை நீட்டிக்கும் அம்னோ உச்சமன்றத்தின் முடிவு செல்லாது என சங்கப் பதிவிலாகா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லானுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சங்கப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநர் ஜாஸ்ரி காசிம் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.

ஆனால் இதற்கு முன்னர் ஜூலை 19-ஆம் தேதியிட்ட பதில் கடிதத்தில் அம்னோ தேர்தல்களை ஒத்திவைப்பதில் ஆட்சேபம் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.

அம்னோவின் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களை இஸ்மாயில் சாப்ரி தன் பக்கம் ஈர்த்திருக்கும் நிலையில் சங்கப் பதிவிலாகாவின் கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கருதப்படுகிறது.