Home நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி – மூடப்பட்ட வாயில்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி – மூடப்பட்ட வாயில்கள்!

639
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை இன்று காலை முதல் முற்றுகையிடத் தொடங்கினர்.

எனினும் நாடாளுமன்றக் கட்டடத்தின் வாயில்கள் மூடப்பட்டு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் அவர்கள் திரண்டனர். அங்கிருந்து பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி நடந்து சென்றனர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்னொரு வகையில் திருப்பம் கண்டிருக்கிறது.

முதன் முறையாக ஜசெக, பிகேஆர், அமானா, சைட் சாதிக் தலைமையிலான மூடா கட்சி, துன் மகாதீர் தலைமையிலான பெஜூவாங் கட்சி, வாரிசான், பார்ட்டி சரவாக் பெர்சாத்து, உப்கோ என அனைத்துக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்து மொகிதினும், அவரின் அமைச்சரவையும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தின.

இந்தப் போராட்டத்தில் துன் மகாதீரும், அன்வார் இப்ராகிமும் தங்களின் சொந்த கருத்து முரண்பாடுகளைக் களைந்து களத்தில் ஒன்றாக நின்ற காட்சி அரசியல்வ வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

(மேலும் விவரங்கள் தொடரும்)