Home உலகம் பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி!

பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி!

410
0
SHARE
Ad

Nawaz Sharif,இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 30 – பாகிஸ்தானில், பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கானும், மதகுரு காதிரியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ராணுவம் நேற்று முயற்சிகளை தொடங்கியது.

இதற்கு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து நவாஸ் ஷெரீப் கூறுகையில், “தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண உதவுமாறு, ராணுவத்தை நான் கேட்கவில்லை“ என்றார்.

#TamilSchoolmychoice

மதகுரு காதிரி கூறுகையில், “பிரச்சனைக்கு தீர்வு காண நவாஸ் ஷெரீப் தான் ராணுவத்தை அழைத்துள்ளார்“ என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடிகளை பயன்படுத்தி, ஆட்சியை ராணுவ தளபதி கைப்பற்றலாம் என்று பேசப்படுகிறது.