Home வணிகம்/தொழில் நுட்பம் அங்கீகரிக்கப்படாத விநியோகஸ்தர்களிடம் கார்களை வாங்க வேண்டாம் – பென்ஸ் நிறுவனம் எச்சரிக்கை

அங்கீகரிக்கப்படாத விநியோகஸ்தர்களிடம் கார்களை வாங்க வேண்டாம் – பென்ஸ் நிறுவனம் எச்சரிக்கை

527
0
SHARE
Ad

Mercedes_Benz_Logo1கோலாலம்பூர், செப்டம்பர் 2 – மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், அங்கீகரிக்கப்படாத விநியோகஸ்தர்களிடம் இருந்து வாங்கப்படும் கார்களுக்கு உத்தரவாதம் கிடையாது என அறிவித்துள்ளது.

மலேசிய வாடிக்கையாளர்கள் பிற நாடுகளில் இருந்து அதிகாரப்பூவமாக இறக்குமதி செய்யும் மெர்சிடஸ் பென்ஸ் ரக கார்கள் தொடர்ந்து பழுதாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோலெண்ட் ஃபோல்கர் கூறுகையில், “மலேசியாவில் அங்கீகரிக்கப்படாத விநியோகஸ்தர்களிடம் இருந்து வாங்கப்படும் கார்களுக்கு எங்கள் நிறுவனம்  உத்தரவாதம் வழங்காது. அவ்வகை கார்கள்  தொடர்ந்து பழுதாவதற்கு முக்கிய காரணம் இங்கு உள்ள எரிபொருளாகும். ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும் பொழுது இங்கு உள்ள எண்ணெயின் தரம் குறைவாகவே உள்ளது.”

#TamilSchoolmychoice

“இதன் காரணமாக அவ்வகை கார்கள் இங்கு அதிகம் பழுதாகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

தென் கிழக்காசிய நாடுகளை ஒப்பிடுகையில் மலேசிய எண்ணெயின் தரம் மோசமானதாக உள்ளது எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.