அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில், பைப்பர் பி.ஏ. 46 என்ற விமானம், எரீ முனிசிபல் விமான நிலையத்தில் நேற்று காலை 11.50 மணியளவில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகின்றது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், எஞ்சிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனை அந்நாட்டின் தேசிய போக்குவரத்து குழுவின் செய்தி தொடர்பாளர் பீட்டர் க்னட்சன் உறுதிபடுத்தி உள்ளார். எனினும் இந்த விபத்திற்கான முழுக்காரணம் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
“ஆறு பேர் பயணம் செய்யக்கூடிய அந்த விமானம் ஓடு பாதையில் சுமார் 300 அடி தொலைவில் விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து பற்றிய விசாரணை நடைபெற்று வருகின்றது” என்று கூறியுள்ளார்.