Home நாடு சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம்: வான் அசிசாவின் பெயரை மட்டுமே பரிந்துரைத்துள்ளோம் – பிகேஆர்

சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம்: வான் அசிசாவின் பெயரை மட்டுமே பரிந்துரைத்துள்ளோம் – பிகேஆர்

727
0
SHARE
Ad

Wan-Azizahபெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 3 – சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை மட்டும் தான் பரிந்துரைக்கப் போவதாக பிகேஆர் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நாசுசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று பிகேஆர் மத்திய செயற்குழு கூட்டத்தில் சைபுன் வெளியிட்ட அறிக்கையில், வான் அசிசாவை மந்திரி பெசார் பதவிக்கு பரிந்துரைக்கும் முடிவில் தாங்கள் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை, வான் அசிசாவின் பெயரை பரிந்துரைத்து அரண்மனைக்கு கடிதம் எழுதிவிட்டதாகவும் சைபுடின் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், “பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலியும், சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு வான் அசிசாவின் பெயரை பரிந்துரைத்திருப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்” என்றும் சைபுடின் தெரிவித்தார்.

பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளான பிகேஆர், ஜசெக ஆகிய இரண்டும் ஒருமனதாக வான் அசிசாவின் பெயரை பரிந்துரைத்திருக்கும் நிலையில், பாஸ் கட்சி வான் அசிசா மற்றும் அஸ்மின் அலி ஆகிய இரண்டு பெயர்களை பரிந்துரைத்துள்ளது.

எனினும், இரண்டில் ஒரு பெயரை அதாவது வான் அசிசாவின் பெயரை மட்டும் பரிந்துரைக்க பாஸ் கட்சிக்கு தற்போது பக்காத்தான் தலைமையில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பாஸ் கட்சி தனது இறுதி முடிவை அறிவிக்க இன்று தான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.