Home அவசியம் படிக்க வேண்டியவை தேனிலவிற்காக தீவையே விலைக்கு வாங்கிய ஏஞ்சலினா ஜோலி-பிராட் பிட்! (காணொளியுடன்)

தேனிலவிற்காக தீவையே விலைக்கு வாங்கிய ஏஞ்சலினா ஜோலி-பிராட் பிட்! (காணொளியுடன்)

664
0
SHARE
Ad

angelina-jolie-brad-pittநியூயார்க், செப்டம்பர் 3 – தங்கள் தேனிலவை கொண்டாட, மால்டா தீவில் இருப்பவர்களை வெளியேற்றி, பணம் கொடுத்து அந்த தீவை வாங்கியுள்ளனர் ஹாலிவுட் நடிகர்கள் பிராட் பிட்டும், அவரது மனைவி ஏஞ்சலினா ஜோலியும்.

நடிகை ஏஞ்சலினா ஜோலியை திருமணம் செய்யாமலேயே அவருடன் சேர்ந்து  வாழ்ந்து வந்தார் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்.

அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தனர். 3 குழந்தைகளை அவர்கள் தத்தெடுத்தனர் .

#TamilSchoolmychoice

மொத்தம் 6 குழந்தைகளும் அவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தனர்.

இதற்கிடையில் பிட்டும், ஜோலியும் கடந்த மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  பிட்டும், ஜோலியும் மால்டா தீவில் தேனிலவை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் தனிமையில் இருப்பதற்காக தீவில் உள்ளவர்கள் வெளியேற அவர்கள் பெரிய தொகையிலான பணத்தைக்  கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்டு தீவை விட்டு வெளியேற பலரும் சம்மதம் தெரிவித்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.