Home கலை உலகம் ஷாருக்கான் நடித்த ‘ஹேப்பி நியூயர்’ படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது!

ஷாருக்கான் நடித்த ‘ஹேப்பி நியூயர்’ படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது!

845
0
SHARE
Ad

happy-new-yearநியூ டெல்லி, செப்டம்பர் 3 – ஷாருக்கான், தீபிகா படுகோன், அபிசேக் பச்சன் நடிப்பில், ஃபாரா கான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹேப்பி நியூயர்’ . இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

ஃபாரா கான் ஏற்கனவே ஷாருக்கானை வைத்து ‘ஓம் சாந்தி ஒம்’  மற்றும் ‘மேய்ன் ஹூ நான்’ என்ற படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார். அவை இரண்டும் மாபெரும் வெற்றி பெற்றன.

இதனால், ஹேப்பி நியூயர் படத்திற்கான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

#TamilSchoolmychoice

இப்படத்தின் முன்னோட்டத்தை (டீசர்) கடந்த மாதத்தில் வெளியிட்டனர் படக் குழுவினர். தற்போது இந்த படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

இப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளில் மேல் வெளியாக உள்ளது. இப்படத்தை 15 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

‘ஹேப்பி நியூயர்’ படத்தின் தமிழ் முன்னோட்டம் இதோ உங்களுக்காக: