Home நாடு சிலாங்கூர் மந்திரி பெசார் : 3 கட்சிகளும் பெயர்களைப் பரிந்துரைத்துள்ளதாக காலிட் தகவல்

சிலாங்கூர் மந்திரி பெசார் : 3 கட்சிகளும் பெயர்களைப் பரிந்துரைத்துள்ளதாக காலிட் தகவல்

621
0
SHARE
Ad

Khalid Ibrahimஷா ஆலம், செப். 4-பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் மூன்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்குப் பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளதாகவும், அப்பெயர்கள் அரண்மனையில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும் பதவி விலகிச் செல்லும் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அரண்மனை தனது கருத்தை தெரிவிப்பதே அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என தாம் நம்புவதாக கூறினார்.

புதிய மந்திரி பெசார் பொறுப்பேற்கும் வரை, மாநில நிர்வாகத்தை நிர்வாகக் குழு கவனிக்கும் என்றார் காலிட்.

#TamilSchoolmychoice

“மாநில அரசியல் சாசனத்திற்கும் மரபுகளுக்கும் உட்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன்,” என்றும் காலிட் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிகேஆர் தலைவர் வான் அசிசா, சிலாங்கூர் மாநில முதல்வராகப் பொறுப்பேற்க வழிவிட்டு பதவி விலகும்படி காலிட் அண்மையில் கேட்டுக் கொள்ளப்பட்டார். இதற்கு அவர் மறுத்ததால் பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட, சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி தொடர்பில் சிக்கல் எழுந்தது.

மந்திரி பெசார் பதவிக்கு குறைந்தபட்சம் இருவரது பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்ற சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷாவின் உத்தரவை ஏற்க மறுத்த பிகேஆர் மற்றும் ஐசெக ஆகிய இரு கட்சிகளும் வான் அசிசா பெயரை மட்டுமே பரிந்துரைத்துள்ளன. எனினும் பாஸ் கட்சி இரு பெயர்களைப் பரிந்துரைத்துள்ளதாக நம்பப்படுகிறது.