Home கலை உலகம் உதயநிதி ஸ்டாலினை அறைந்த நயன்தாரா! உதயநிதியே விளக்கமளித்தார்

உதயநிதி ஸ்டாலினை அறைந்த நயன்தாரா! உதயநிதியே விளக்கமளித்தார்

1592
0
SHARE
Ad

Udhayanidhi Stalin, Nayanthara in Idhu Kathirvelan Kadhal Movie Stillsசென்னை, செப்டம்பர் 5 – சில மாதங்களுக்கு முன் உதயநிதி – நயன்தாரா காதல் கிசு கிசு என தமிழ் திரையுலகமே பரபரப்பில் இருந்தது. அதிலும் உதயநிதி தற்கொலை முயற்சி செய்து கொண்டார் என வதந்திகள் பரவ ஆரம்பித்தன.

இதுநாள் வரை இது குறித்து  மௌனம் சாதித்த உதயநிதி தற்போது அவரே விளக்கம் அளித்துள்ளார்.

“நான் மருத்துவமனைக்குப் போக நயன்தாராவும் ஒரு விதத்தில் காரணம்தான். ஆனால், அது காதல் தற்கொலை முயற்சி இல்லை. ’நண்பேன்டா’ படத்தில் ஒரு சண்டைக்காட்சி. அதில் நயன்தாராவை நான் சுத்திவிட, அவர் வில்லனை அறைந்துவிட்டு திரும்பி வருகிற மாதிரியான ஒரு காட்சி. ஆனால், நான் நயன்தாராவை சுத்திவிட்டதும் என்னையே அவர் அடித்துவிட்டார். அவரது நகம் என் இடது கண்ணில் குத்தி ரத்தம் வழிந்தது. அதனால் தான் மருத்துவமனைக்கு சென்றேன்”  என்று விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி.