Home நாடு மந்திரி பெசார் பதவிக்கு பெயர்களை பரிந்துரைத்தது உண்மைதான் – பாஸ் தலைமைச் செயலாளர் ஒப்புதல்

மந்திரி பெசார் பதவிக்கு பெயர்களை பரிந்துரைத்தது உண்மைதான் – பாஸ் தலைமைச் செயலாளர் ஒப்புதல்

528
0
SHARE
Ad

Mustafa Aliஷா ஆலாம், செப். 5-சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது உண்மைதான் என அக்கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.

பிகேஆர் கட்சியை சேர்ந்த இருவரது பெயர்களுடன் பாஸ் கட்சி உறுப்பினரின் பெயரும் அரண்மனைக்குப் பரிந்துரைக்கப்பட்டது என பாஸ் பொதுச்செயலாளர் டத்தோ முஸ்தபா அலியை (படம்) மேற்கோள் காட்டி ஹராக்கா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஸ் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது யார் என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டாலும், பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா, அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆகியோருடன், சிலாங்கூர் மாநில பாஸ் ஆணையர் இஸ்கந்தர் அப்துல் சமாட்டின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

“இரண்டு பெயர்களுக்கும் மேல் பரிந்துரைக்க வேண்டும் என அரண்மனை கேட்டுக் கொண்டதால் மூன்று பெயர்களை அனுப்பியுள்ளோம். பெயர்கள் நேற்றே அரண்மனைத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது” என்று டத்தோ முஸ்தபா அலி தெரிவித்துள்ளார்.