தோக்கியோ, செப்டம்பர் 5 – ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த, பிரதமர் நரேந்திர மோடி, தனது வருகையின் ஒரு பகுதியாக, நேதாஜியின் நீண்ட நாள் நண்பரை நேரில் சந்தித்தார்.
ஜப்பானில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோடி, அந்நாட்டை சேர்ந்த, 93 வயது முதியவரை சந்தித்து பேசினார். அவர், இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் நேதாஜிக்கு பல உதவிகள் செய்தவர் என மோடிக்கு தெரிவிக்கப்பட்டது.
நேதாஜியின் பழைய நண்பரான அந்த முதியவர், மோடியிடம் நேதாஜியைப் பற்றிய பல அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
தனது இறுதிக் காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி ஜப்பானில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.