இதில் நாயகியாக அக்ஷா பர்தசானி, நடித்துள்ளார். நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இந்தப் படம் அவர் முதலில் நடித்த நான் படத்தின் இரண்டாம் பாகம். சலீம் ஆகிய நான் என்றுதான் தலைப்பே வைத்திருந்தார்.
பின்னர் விஜய் ஆண்டனி நிருபர்களிடம் கூறுகையில், “நான்’ படத்தின் 2-ம் பாகமாக ‘சலீம்’ வந்துள்ளது. சமூக அவலங்களை வெளிப்படுத்தும் வகையில், விறுவிறுப்பான படமாக கொடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்து என் நடிப்பில் வெளியாகும் படம் ‘இந்தியா – பாகிஸ்தான்’. ‘நான்’ படத்தின் 3-ம் பாகத்தை எடுத்து அடுத்த ஆண்டு வெளியிடுவேன்,” என்றார் விஜய் ஆண்டனி.