சென்னை, செப்டம்பர் 5 – தமிழ் சினிமாவில் தாங்கள் ஏற்படுத்தும் சாதனைகளைத் தாங்களே முறியடிப்பவர்கள் ஒரு சிலரே.
அந்த வகையில் ரஜினியும், ஷங்கரும் தான் இதில் முன்னோடிகள்.
இவர்கள் கூட்டணியில் உருவான ‘எந்திரன்’ படமே இன்று வரை வசூல் சாதனையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தன் சாதனையை தானே முறியடிக்க ஷங்கர் தன் அடுத்த படைப்பான ஐ’யை உருவாக்கிவிட்டார்.
இப்படத்தின் தெலுங்கு உரிமை 30 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இது ‘எந்திரன்’ படத்தின் உரிமை விலையை விட 3 கோடி ரூபாய் அதிகமாம். ‘எந்திரன்’ படத்தின் தெலுங்கு உரிமை 27 கோடி ரூபாய்க்கு விலை போனது இங்கே குறிப்பிடத்தக்கது.