Home வாழ் நலம் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் குடைமிளகாய்!

இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் குடைமிளகாய்!

925
0
SHARE
Ad

capsicum,செப்டம்பர் 5 – குடைமிளகாய் பெயரில் மட்டுமே காரம்… ஆனால், உள்ளே இருப்பது அத்தனையும் காரத்துக்கு நேர்மாறான நல்ல குணங்கள்.

‘சேரிடம் அறிந்து சேர்’ என்பதற்கு  எதிராக, எந்த உணவுடன், எப்படிச் சேர்த்தாலும் தன் தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்காமல், அதே நேரம் தனியாகவும் நிற்காமல் சுவை கூட்டும்  ஒரு காய் குடைமிளகாய்.

பச்சையாகவும் சாப்பிட ஏற்றது. சாம்பார், பொரியல் முதல் பீட்சா வரை எதனோடும் இணக்கமாகப் போவதுதான் இதன் சிறப்பு. மிளகாய் குடும்பத்தைச் சேர்ந்த குடைமிளகாய், பாரம்பரிய காயாகக் கருதப்படுவதில்லை.

#TamilSchoolmychoice

தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காதான் குடைமிளகாயின்  பிறப்பிடம் என்று சொல்லப்படுகிறது.  கொலம்பஸ்தான் 1492-ல் மேற்கிந்திய பகுதிகளில் இருந்து குடைமிளகாயை சேகரித்து, ஸ்பெயினுக்கு கொண்டு  சென்றதாகவும் ஒரு தகவல் உண்டு.

சூடான மற்றும் குளிர் பிரதேசம் என எங்கேயும் வளரக்கூடிய தன்மை கொண்ட குடைமிளகாய், இன்று சீனா,  துருக்கி, இத்தாலி, ஸ்பெயின்,  ரோமானியா, இந்தியா, மெக்சிகோ நாடுகளில் பிரதானமாக பயிரிடப்படுகிறது.  உலகம் முழுக்க 27 வகையான குடைமிளகாய் விளைகிறது.

capsicumகுடைமிளகாயின் நன்மைகள்:

*குடைமிளகாய்க்கு ‘ட்ரைகிளிசரைட்’ எனும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, கலோரி எரிப்பைத் தூண்டி, வளர்சிதை மாற்ற இயக்கத்தை  சீராக்கும் குணமுண்டு.

*குறைந்த அளவு கொழுப்பு மற்றும் நார்ச்சத்து (கார்போஹைட்ரேட்) கொண்டது என்பதால் எடை குறைப்புக்கு உதவக்கூடியது.

*பீட்டா கரோட்டின், மற்றும் வைட்டமின் சி ஆகிய ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகளை அதிகம் கொண்டது. அதன் விளைவாக  திசுக்களுக்கும், ரத்தக்குழாய், நரம்புகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்த்து, இதய நோய்கள், ஆஸ்துமா,  சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன.

*குடைமிளகாயில் ‘கேப்சைசின்’ என்கிற அமிலம் உண்டு. வாயினுள் ஒருவித எரிச்சல் உணர்வை உண்டாக்கக்கூடிய இதற்குப் புற்றுநோயைத்  தவிர்க்கக்கூடிய சக்தியும் உண்டாம்.

capsicum-*இந்த  குடைமிளகக்கு சருமத்திலிருந்து முதுகெலும்புக்கு வலி பரவுவதைத் தவிர்க்கும் சக்தியும் உண்டாம். அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகான வலிகளைக்  குறைக்கவும் உதவக்கூடியது.

*வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் நிறைந்த குடைமிளகாயானது நோய் எதிர்ப்பு சக்திக்கு உத்தரவாதமளிக்கக் கூடியது. இதிலுள்ள வைட்டமின் பி  மற்றும் ஃபோலேட் ஆகியவை மன அழுத்தம், மனச்சோர்வை விரட்டக் கூடியவை.

*ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் கட்டுப்படுத்துவதால் குடைமிளகாய்க்கு இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் குணமும் உண்டு.  செரிமான நீர் சுரப்பைத் தூண்டி, செரிமானத்தை சீராக்கக் கூடியது.