Home கலை உலகம் ஓய்வில்லாமல் 7படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி!

ஓய்வில்லாமல் 7படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி!

691
0
SHARE
Ad

vijay sathupathiசென்னை, செப்டம்பர் 5 – தமிழ் சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஏழு படங்களுடன் நேரமே இல்லாமல் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள ‘மெல்லிசை’, கிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்கும் ‘வன்மம்’ , சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணுவுடன் இணைந்து நடிக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ ,ஆர்யா, ஷாமுடன் இணைந்து நடிக்கும் ‘புறம்போக்கு’ மற்றும் விஜய் சேதுபதி 45 வயது தோற்றத்தில் நடித்து வரும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ என படங்களின் பட்டியல் நீள்கிறது.

இவை தவிர தனுஷ் தயாரிப்பில் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்திற்கு ‘நானும் ரௌடிதான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் ‘வசந்த குமரன்’ என்ற படம் வருகிற அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட உள்ளது. இந்த வருடத்தில் இத்தனைப் படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி தான்.