Home இந்தியா உலக அளவில் இந்தியாவில் தான் விமான கட்டணங்கள் மிகவும் குறைவு!

உலக அளவில் இந்தியாவில் தான் விமான கட்டணங்கள் மிகவும் குறைவு!

580
0
SHARE
Ad

indiaசிட்னி, செப்டம்பர் 7 – உலக அளவில் மிகவும் குறைந்த விமான கட்டணத்தில் பயணம் செய்ய ஏற்ற நாடு இந்தியா என ஆஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகையான சிட்னி மார்னிங் ஹெரால்டு அறிவித்துள்ளது.

உலக அளவில் பொது மற்றும் வர்த்தக நோக்கத்திற்காக பயன்படும் விமானங்கள் மற்றும் அதற்கான கட்டணங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்த சிட்னி மார்னிங் ஹெரால்டு நிறுவனம் நேற்று அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில், உலக அளவில் இந்தியாவில் தான் மிகவும் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

#TamilSchoolmychoice

“மலேசியா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பி்டுகையில் இந்தியாவில் 100 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் மேற்கொள்ள வெறும் 10.36 அமெரிக்க டாலர்களே செலவாகின்றது. ஆனால், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, போன்ற நாடுகளில் இதே 100 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கு 139.90 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகின்றன. அதிக விமான கட்டணம் உள்ள நாடுகள் பட்டியலில் லிதுவானியா, ஆஸ்திரியா, எஸ்டோனியா போன்ற நாடுகள் உள்ளன.”

Air_India“இந்தியாவிற்கு அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவிலும் விமான கட்டணம் மிகக்குறைவாக உள்ளது. அங்கு 100 கி.மீ பயணம் செய்ய 11.63 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன” என்று அறிவித்துள்ளது.

சிட்னி மார்னிங் பத்திரிகையின் ஆராய்ச்சி நம்பகத்தனமானது என நிரூபிக்கும் வகையில் இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் வியப்பை ஏற்படுத்தும் வகையில் ரூ.100, ரூ.500 என கட்டண சலுகையை அவ்வபோது அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.