Home கலை உலகம் ‘ஐ’ படம் குறித்து அர்னால்ட் கருத்து! (காணொளி)

‘ஐ’ படம் குறித்து அர்னால்ட் கருத்து! (காணொளி)

549
0
SHARE
Ad

Arnoldசென்னை, செப்டம்பர் 6 – விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஐ’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15-ம் தேதி  நடக்கவுள்ளது. இவ்விழாவில் ஹாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அர்னால்ட் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இந்த படம் குறித்து அர்னால்ட் பேசும் 32 வினாடிகள் கொண்ட காணொளி நேற்று யூடியூப் ஊடகத்தில் வெளியானது.

#TamilSchoolmychoice

அதில் அர்னால்ட் கூறியதாவது:-

“ஐ படம் மிகவும் பிரமாண்டமான படம். இப்படத்தை இயக்குனர் ஷங்கர் மிகவும் அற்புதமாக இயக்கியுள்ளார். விக்ரம் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார். ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் நான் கலந்து கொள்கின்றேன்” இவ்வாறு அர்னால்ட் தெரிவித்தார்.

அர்னால்ட் பேசிய அந்த காணொளி:-