Home கலை உலகம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மருத்துவமனையில் அனுமதியா?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மருத்துவமனையில் அனுமதியா?

757
0
SHARE
Ad

A.R.M-brotherசென்னை, செப்டம்பர் 8 – இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.  தற்போது “கத்தி” படத்தின் உருவாக்கத்தினால் கடும் பணிப் பளுவில் இருக்கும் இவர், உடல் நிலைக்குறைவால் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“கத்தி” படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் படத்தை தீபாவளியன்று வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதால், முருகதாஸ், இப்படத்திற்காக ஓய்வு இன்றி பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், முருகதாஸுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதெனவும்,  இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இவர் நலமாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.