Home உலகம் இரண்டாவது வாரிசை எதிர்பார்த்து காத்திருக்கும் இளவரசர் வில்லியம் தம்பதியர்!

இரண்டாவது வாரிசை எதிர்பார்த்து காத்திருக்கும் இளவரசர் வில்லியம் தம்பதியர்!

587
0
SHARE
Ad

kate-baby-mலண்டன், செப்டம்பர் 9 – இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேத்தே தம்பதியர் தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று தெரிவித்தது.

அனைத்துலக ஊடகங்கள் மத்தியில் பரவலாகவும் அதிகமாகவும் பேசப்பட்ட, இத்தம்பதியரின் முதல் குழந்தை (இளவரசர் ஜோர்ஜ்) கடந்த ஆண்டு ஜூலையில் பிறந்தது.

இங்கிலாந்து அரியணையை அலங்கரிக்கக் கூடியவர்களின் பட்டியலில் வில்லியம் இரண்டாவதாகவும், ஜோர்ஜ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

#TamilSchoolmychoice

“இங்கிலாந்து அரசியும், இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இளவரசர் வில்லியம் தம்பதியரின் இரண்டாவது வாரிசு குறித்த செய்தியை அறிந்து மிகுந்த பரவசத்தில் உள்ளனர்,” என்று பக்கிங்ஹாம் அரண்மனை விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

எனினும் குழந்தை எப்போது பிறக்கும் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

“இளவரசர் வில்லியம் தம்பதியர் இரண்டாவது வாரிசை எதிர்பார்த்திருக்கும் செய்தியை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு என்
வாழ்த்துகள்,” என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.