Home கலை உலகம் முருகதாஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய், அஜித், சூர்யா!

முருகதாஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய், அஜித், சூர்யா!

657
0
SHARE
Ad

Vijayசென்னை, செப்டம்பர் 9 – தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்றால் அஜித், விஜய், சூர்யா -இவர்கள்தான். இவர்கள் மூவரையும் வைத்து தனித்தனியே இயக்கிய பெருமை முருகதாஸையே சேரும்.

நேற்று முருகதாஸுக்கு ஏற்பட்ட அஜீரணக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த திரை நட்சத்திரங்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர்.

இருப்பினும் இன்று காலை உடல் நலம் தேறி வீட்டிற்கு திரும்புவதாக முருகதாஸ் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் இவரை நேரில் சென்று நலம் விசாரித்து வந்துள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத முருகதாஸ் சந்தோஷத்தில் உணர்ச்சிவசப்பட்டுள்ளாராம்.