Home இந்தியா வெள்ள நிவாரண உதவி: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நவாஸ் ஷெரீப்!

வெள்ள நிவாரண உதவி: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நவாஸ் ஷெரீப்!

605
0
SHARE
Ad

modi sharifஇஸ்லாமாபாத், செப்டம்பர் 9 – பாகிஸ்தானில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழை சார்ந்த விபத்துகள் ஏற்பட்டது ஒருபுறமிருக்க,  வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

வெள்ள பாதிப்பினால் துயரப்படும் பாகிஸ்தான் மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்துக்கு பதில் அளித்தும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் நவாஸ் ஷெரிப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளதாவது:-

#TamilSchoolmychoice

“பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பினால் உயிரிழந்த மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தும், துயரப்படும் பாகிஸ்தான் மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது எனவும் நீங்கள் எனக்கு எழுதியிருந்த நேற்றைய கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல், இந்திய-பாகிஸ்தான் எல்லையோரம் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இந்த வெள்ளத்தினால் உயிரிழப்பும், உடமையிழப்பும் ஏற்பட்டுள்ளதையும் அறிவேன்.

இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புப் பணிகளுக்கும், நிவாரணத்துக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில்,

இயற்கை பேரிடர்களை சந்திக்கும் மனத்திறனை நமது மக்களுக்கு உண்டாக்கும் வகையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.