குப்பர்ட்டினோ (அமெரிக்கா), செப்டம்பர் 10 – இன்று உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அறிமுக விழாவில் ஐபோன் 6 மற்றும் ஆப்பிள் வாட்ச் எனப்படும் கைக்கெடிகாரம் ஆகியவற்றுடன் ‘ஆப்பிள் பே’ (Apple Pay) என்ற கட்டணம் செலுத்தும் முறையும் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் முதலில் அமெரிக்காவில் செயல்படத் தொடங்கும். இதன் மூலம், இனிமேல் கிரெடிட் கார்டுகள் எனப்படும் கடன் அட்டைகள் மூலம் கட்டணங்களைச் செலுத்தும் முறைக்கு தேவை இருக்காது.
விரல் நுனியில் ஒரே அழுத்தத்தின் மூலம் நீங்கள் கட்டணம் செலுத்தலாம். எந்தவித அட்டை (கார்டு) எண்ணும் உள்ளே பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை. முகவரியைத் தெரிவிக்க வேண்டியதில்லை. உங்களின் கடன் பத்திர அட்டையின் விவரங்களை நீங்கள் பொருள் வாங்கும் வியாபாரியுடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை.
கட்டணம் செலுத்தும் மையத்தில் உங்களின் பாதுகாப்பு எண் (Security Code), உங்களின் பெயர், உங்களின் கடன் அட்டை எண் என எதையுமே நீங்கள் தெரிவிக்க வேண்டியதில்லை.
ஆப்பிள் பே திட்டத்தின் கீழ் நீங்கள் வாங்கும் பொருட்களின் விவரம் ஆப்பிள் நிறுவனத்திற்கு தெரியாது. என்ன விலை கொடுத்தீர்கள் என்பதும் தெரியாது. எங்கே வாங்கினீர்கள் என்பதும் தெரியாது.
முதல் கட்டமாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், விசா, மாஸ்டர் கார்ட் ஆகிய மூன்று கடன் அட்டை நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைகின்றன.
மேலே காணும் வங்கிகள் இந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக இணைந்துள்ளன
இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 6இன் துணை கொண்டு இந்த ஆப்பிள் பே திட்டத்தில் பயனர்கள் பங்கு கொள்ளலாம்.