குப்பர்ட்டினோ (அமெரிக்கா), செப்டம்பர் 10 – இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்று ம் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளுடன் ஆப்பிள் கைக்கெடிகாரம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) என்ற கைக்கெடிகாரம் செயல்பட உங்களிடம் ஐபோன் இருக்க வேண்டும்.
இந்த கைக்கெடிகாரத்தினுள் பூகோள வரைபடங்கள், படங்கள், குறுஞ்செய்திகள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
தாங்கள் இதுவரை உருவாக்கியவற்றில் மனிதனுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக செயல்படும் சாதனம் இந்த ஆப்பிள் கைக்கெடிகாரம்தான் என இதனை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் அறிவித்தார்.
ஆப்பிள் கைக்கெடிகாரத்தின் சில வடிவங்களை இங்கே காணலாம்:-
இந்த ஆப்பிள் கைக்கெடிகாரத்தினுள் உடற்பயிற்சியின் போது தேவைப்படும் தகவல்கள் செயலிகளாக (Apps) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் உடற்பயிற்சி செய்யும் போது இந்த ஆப்பிள் கைக்கெடிகாரத்தைக் கட்டிக்கொண்டால், இரத்த அழுத்தம், இதயத் துடிப்புகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
அழகிய இளம் பச்சை நிறத்திலான வாருடன் கூடிய ஆப்பிள் கைக்கெடிகாரம்….
தங்க நிறத்திலான ஆப்பிள் கைக்கெடிகாரம் – நீலவண்ண வாருடன்….
ஆப்பிள் கைக்கெடிகாரத்தின் இன்னொரு வடிவம் ….
இரண்டு வெவ்வேறு விதமான வடிவங்களின் ஆப்பிள் கைக்கெடிகாரம்….