Home கலை உலகம் 15-ம் தேதி ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா: ரஜினிகாந்தும் கலந்து கொள்கிறார்!

15-ம் தேதி ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா: ரஜினிகாந்தும் கலந்து கொள்கிறார்!

515
0
SHARE
Ad

ai,சென்னை, செப்டம்பர் 11 – ‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் வரும் திங்கட்கிழமை 15-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொள்கிறார். அவருடன், ரஜினிகாந்தும், தமிழ் பட உலகின் பிரபலங்களும் கலந்துகொள்கிறார்கள்.

தமிழ் பட உலக வரலாற்றில் மிக அதிக செலவில் உருவாகியிருக்கும் படம், ‘ஐ ‘. தசாவதாரம், அந்நியன் போன்ற பிரமாண்டமான படங்களை தயாரித்த ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன், ரூ.180 கோடி செலவில் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.

‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இந்த இசை விழாவை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

arnold,விழாவில், ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

அவருடன், நடிகர் ரஜினிகாந்தும், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் புனித்ராஜ்குமார், மலையாள நடிகர் சுரேஷ்கோபி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்களும் கலந்துகொள்கிறார்கள். ‘

விழாவையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில், நடிகர்-நடிகைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.விழாவுக்கான ஏற்பாடுகளை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.