Home இந்தியா இந்திய எதிர்ப்பையும் மீறி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்து விவாதம்!

இந்திய எதிர்ப்பையும் மீறி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்து விவாதம்!

648
0
SHARE
Ad

parliamentஇலண்டன், செப்டம்பர் 14 – இந்திய எதிர்ப்பையும் மீறி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்த விவாதம் நடைபெற்றதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரிட்டன் நாடாளுமன்றத்தில், நடைபெற்ற விவாதத்தின் போது அந்நாட்டின் சுதந்திர ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் வார்ட் கூறுகையில், “உலக அமைதிக்கு காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். இதற்கு சுமூகத் தீர்வு எட்டப்படாத வரை இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்நேரமும் போர் மூளும் அபாய நிலை நிலவி வரும். இவ்விவகாரத்தில் பிரிட்டன், அதனை அயல்நாட்டு பிரச்சனையாக கருதக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட்டு இருப்பது, இந்திய உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு சமமான ஒன்றாகும். இதனை பிரிட்டன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

 

 

Comments