Home உலகம் ஒபாமா, டேவிட் கேமரூன் தலைகள் வெட்டப்படும் – ஐஎஸ்ஐஎஸ் பெண் போராளி சபதம்!

ஒபாமா, டேவிட் கேமரூன் தலைகள் வெட்டப்படும் – ஐஎஸ்ஐஎஸ் பெண் போராளி சபதம்!

557
0
SHARE
Ad

obama,இலண்டன், செப்டம்பர் 14 – ஈராக் மற்றும் சிரியா உட்பட சில நாடுகளை இணைத்து இஸ்லாமிய நாடாக உருவாக்க கடும் ஆயுதப் போராட்டங்களை வெளிப்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அமைப்பில் உள்ள பெண் போராளி ஒருவர், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் தலைகளை வெட்ட இருப்பதாகக் கூறி உள்ளார்.

அக்ஸா மஹ்மூத் என்ற இளம் வயதுப் பெண், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் வசித்து வருகின்றார். கதிர்வீச்சியல் துறை சார்ந்த மேற்படிப்பை படித்து வரும் அவர்,  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த அமைப்பில் தன்னை தீவிரமாக இணைத்துக் கொண்டார்.

அதன் பின்னர் இணையம் மூலம் ஸ்காட்லாந்தில் இருந்தபடியே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் ஆட்களை இணைத்து வந்தார். இந்நிலையில் துருக்கி சென்ற அவர்,  செல்பேசி மூலம் தனது பெற்றோருக்கு அனுப்பிய குறுந்தகவல்களை பிரிட்டன் உளவு அமைப்பினர் பார்த்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அதில் அவர் கூறியுள்ளதாவது:- “வீர மரணம் அடையவே நான் விரும்புகிறேன். தீர்ப்பிற்கான இறுதிநாளின் போது நான் உங்களை சந்திகின்றேன். உங்களையும் என்னுடன் சேர்த்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.” “விரைவில் பிரிட்டனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கைப்பற்றும்.

அந்நாட்டில் எங்களது கொடி பறக்க விடப்படும். பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தலைகள் வெட்டப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவிற்கும், கேமரூனிற்கும் பெண் போராளி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.