Home கலை உலகம் மம்முட்டியின் ‘மை ட்ரீ’ சவாலை ஏற்ற விஜய்!

மம்முட்டியின் ‘மை ட்ரீ’ சவாலை ஏற்ற விஜய்!

613
0
SHARE
Ad

vijay,சென்னை, செப்டம்பர் 18 – ஒரு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட ‘ஏ.எல்.எஸ் ஐஸ் குளியல் சவால்’ உலகம் முழுவதும் காட்டுத் தீயாக பரவி விட்டது. பல பிரபலங்களும் இந்த சவாலை ஏற்க, அதனால், நமக்கு பிரபலங்களின் ஐஸ் குளியலைத் தாங்கிய வித்தியாசமான புகைப்படங்களும், காணொளிகளும் கிடைத்தன.

அந்த நோய் மீதான இயக்கத்திற்கோ கோடிக்கணக்கான ரிங்கிட் நன்கொடைகள் குவிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சமூக அக்கறையுடன் அத்தகைய சவாலை வெவ்வேறு வடிவங்களில் மாற்றி சவால் விட்டு வருகின்றனர். “ரைஸ் பக்கெட் சவால்”, “பால் பாக்கெட் சவால்” என பல சவால்கள்.

#TamilSchoolmychoice

அந்த வரிசையில் மலையாள “சூப்பர் ஸ்டார் மம்முட்டி” தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து ‘மை ட்ரீ சவால்’ என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கினார்.

vijayஉலகம் வெப்பமயமாதலை தடுப்பதற்காகவும் மரம் வளர்த்து பூமியை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் இதை செயல்படுத்துவதாக அறிவித்திருக்கிறார்.

மேலும் இந்த சவாலை விஜய், சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் ஏற்கும்படியும் அவர் சவால் விட்டிருந்தார். கத்தி பட பிரச்சனையில் இருக்கும் விஜய் இந்த சவாலை ஏற்பாரா? என்ற சிந்தனையில் இருந்த ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.

மம்முட்டியின் சவாலை ஏற்று அண்மையில் ஒரு மரக்கன்றை நட்டு வைத்து அதை புகைப்படம் எடுத்து தனது வலைப்பக்கத்தில் போட்டுள்ளார் விஜய்.

மம்முட்டி “மை ட்ரீ சவாலை” அறிவித்த சிலமணி நேரங்களில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் மரக்கன்றுகள் நட்டு அதை படமெடுத்து அனுப்ப ஆரம்பித்தனர்.

vijay-treeஇதனைத் தொடர்ந்து மிகப் பெரிய இரசிகர் வட்டத்தைக் கொண்ட விஜய் ரசிகர்களும் தங்கள் வீடுகள் தோறும் மரக்கன்று வைத்து இந்த “மை ட்ரீ சவாலை பின் பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.