Home நாடு உதயகுமார் தண்டனை 6 மாதங்கள் குறைப்பு – மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு‏

உதயகுமார் தண்டனை 6 மாதங்கள் குறைப்பு – மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு‏

898
0
SHARE
Ad

P Uthayakumarபுத்ராஜெயா, செப்டம்பர் 18 –  ஹிண்ட்ராஃப் நிறுவனர் பி.உதயகுமாரின் தண்டனைக் காலத்தை ஆறு மாதங்களுக்கு குறைத்து மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் அக்டோபர் மாதமே சிறையில் இருந்து விடுதலையாகக் கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி, அன்றைய இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதியதாக ஒரு கடிதத்தை, இணையதளம் ஒன்றில்
வெளியிட்டார் உதயகுமார்.

இதையடுத்து அரசுக்கு எதிராகச் செயல்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது  வழக்குப் பதிவானது.

#TamilSchoolmychoice

வழக்கு விசாரணையின்போது தன்னை தற்காத்துக் கொள்ளும் விதமாக வாதம் புரிய
மறுத்தார் உதயகுமார். மலேசியாவில் இந்தியர்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாம் இம்முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

எனினும் பின்னர் தன் மீதான குற்றச்சாட்டையையும் விதிக்கப்பட்ட தண்டனையையும் எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அவரது முறையீட்டு
மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தனது தண்டனையைக் குறைக்கக் கோரி உதயகுமார் தாக்கல் செய்த
மனுவை விசாரித்த மூன்று பேர் அடங்கிய மேல் முறையீட்டு நீதிமன்ற அமர்வு, உதயகுமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏகமனதாக ஏற்பதாக அறிவித்தது.

அதேவேளையில் உதயகுமாரின் தண்டனைக் காலத்தைக் குறைத்தும் இந்த அமர்வு உத்தரவிட்டது.

“குற்றச்சாட்டுக்கு எதிரான புகாரில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. எனவே மனுதாரரின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறோம்,” என மேல்முறையீட்டு நீதிபதி
அசிசா தனது தீர்ப்பில் கூறினார்.

சிறைச்சாலை வழங்கும் ஆரஞ்சு நிற உடையுடன் நீதிமன்றம் வந்திருந்த உதயகுமார், தனக்கான தண்டனை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் மிகுந்த உற்சாகம் அடைந்தார்.

நீதிமன்றத்தில் கூடி இருந்த ஆதரவாளர்களிடம், தமது கணிப்பின்படி அக்டோபர்
3ஆம் தேதி தான் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.