Home வாழ் நலம் ரத்த அழுத்தம், இதய பாதுகாப்பிற்கு பெரிதும் உதவும் புளுபெர்ரி!

ரத்த அழுத்தம், இதய பாதுகாப்பிற்கு பெரிதும் உதவும் புளுபெர்ரி!

1321
0
SHARE
Ad

Mirtilo2செப்டம்பர் 15 – புளுபெர்ரி என்று அழைக்கப்படும் அவுரிநெல்லி பழங்கள் நீலநிறத்தில் காணப்படுகிறது. இதன் பூக்கள் மணி வடிவத்தில் வெள்ளை, இளஞ்சிவப்பு  அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இதன் தாயகமாக பிரிட்டிஷ்  கொலம்பியா போன்ற நாடுகள் கருதப்படுகிறது. இது கொழுப்பை குறைக்க, ரத்த  அழுத்தம், இதய பாதுகாப்பு, போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகிறது.

blue berry,நோய் எதிர்ப்பு சக்தி:

#TamilSchoolmychoice

இயற்கையின் கொடையில் மிகச்சிறந்த உணவாக கருதப்படும் புளுபெர்ரி, வேறு எந்த பழங்கள், காய்கறிகளை விட அதிக அளவு  நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது என்று ஆய்வுகளின் முடிவில் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி  பழம் நீலநிறமாவதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகளவு கொண்டுள்ளது. மேலும், இதில் பைபர் மற்றும் வைட்டமின் சி ஊட்டசத்துகள்  நிறைந்துள்ளது. இது இதயத்தில் உண்டாகக் கூடிய நோய்களை தடுக்கிறது.

Blueberriesகொழுப்பை குறைக்க:

நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழமானது எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. உடலை அழகாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள்  புளுபெர்ரி பழங்களை சாப்பிடலாம்.

இப்பழத்தை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடலை பாதுகாக்கிறது. சிலர் தொப்பையை  குறைக்க முடிவதில்லை என கவலைப்படுவது உண்டு. அவர்கள் உலர்ந்த புளுபெர்ரியை சாப்பிட்டு தொப்பையைக்  குறைக்கலாம்.

இரத்த அழுத்தத்தை தடுக்க:

இரத்த அழுத்தத்திற்கு எதிராக இந்த பழத்தின் நிறமிகள்  போராடி உடல் நலத்தை பாதுகாக்கிறது. புளுபெர்ரியை வைத்து மேற்கொண்ட ஒரு ஆய்வில் 134,000 பெண்கள் மற்றும் 23,000 ஆண்கள்  சோதனைக்கு உட்படுத்தபட்டனர்.

அவர்களுக்கு வாரத்திற்கு 1/2 கப் பழங்கள் கொடுக்கப்பட்டது. அதில் அவுரிநெல்லி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு  இரத்த அழுத்தமானது, பழங்களை உட்கொள்ளாதவர்களை விட குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது.

Blueberry-sweatsமூளை பராமரிப்பு:

புளுபெர்ரி பழத்தில் உள்ள அந்தோசியனின்கள் எனப்படும் சத்து மூளையின் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புகளையும் இணைத்து அதிகரிக்கும் ஆற்றலை  கொண்டுள்ளது.

புளுபெர்ரி பழச்சாற்றை வயதானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளவதால் அவர்களது ஞாபகசக்தி மாறுபடுகிறது என்று ‘சின்சின்னாட்டி  அகாடமிக் ஹெல்த் சென்டர்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

12 வாரங்களுக்கு பிறகு பழச்சாற்றை பருகினவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்  திறன் மேலும் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் தகவல் அளித்துள்ளனர்.