Home உலகம் 18-ம் தேதி ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்கான வாக்களிப்பு!

18-ம் தேதி ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்கான வாக்களிப்பு!

662
0
SHARE
Ad

ukலண்டன், செப்டம்பர் 15 – பிரிட்டன் குடியரசில் இருந்து ஸ்காட்லாந்து தனிச் சுதந்திர நாடாகப் பிரிவதற்கான வாக்களிப்பு வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,

இந்த நிகழ்வு ஒரு தலைமுறையின் எண்ணம் என்றும் இது நடக்காமல் போனால், தான் மீண்டும் அதற்கான எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளப்போவதில்லை என ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் அலக்ஸ் சல்மண்ட் கூறியுள்ளார்.

தனிச் சுதந்திரம் வேண்டி, ஸ்காட்லாந்து மக்கள் தொடர்ந்து நடத்தி வந்த போராட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எதிர் வரும் 18-ம் தேதி (வியாழக்கிழமை) நடக்கவிருக்கும், சுந்திரத்திற்கான வாக்களிப்பின் முடிவில், அதற்கான விடை கிடைத்து விடும்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இது ஒரு தலைமுறையில் ஸ்காட்லாந்திற்காக ஒரேயொரு தடவை எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று இரு தரப்பு தலைவர்களும் கூறியுள்ளனர்.

தனிநாடு கோரிக்கையை கைவிட்டால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அதிக அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் வரி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான வரம்புகள் உயர்த்தப்படும் என்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உறுதியளித்துள்ள நிலையில்,

தனிச் சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அணியின் தலைவர்களுள் ஒருவரான அலிஸ்டர் டார்லிங் இது தொடர்பாக கூறுயுள்ளதாவது:-

“சுதந்திரத்துக்கு ஆதரவாக ஒருவர் வாக்களித்து விட்டு, பின்னர் தனது மனதை மாற்றிக்கொண்டால், அதற்குப் பின்னர் அவருக்கு வாய்ப்பே இருக்காமல் போய்விடும்” என்று எச்சரித்துள்ளார்.