Home உலகம் ஐஎஸ்ஐஎஸ் மீண்டும் அட்டூழியம்: இம்முறை பிரிட்டன் பிணைக்கைதி படுகொலை!

ஐஎஸ்ஐஎஸ் மீண்டும் அட்டூழியம்: இம்முறை பிரிட்டன் பிணைக்கைதி படுகொலை!

584
0
SHARE
Ad

cachedபெய்ரூட், செப்டம்பர் 15 – அமெரிக்க பிணைக் கைதிகளைத் தொடர்ந்து நேற்று பிரிட்டன் பிணைக் கைதி ஒருவரின் தலையையும் கொய்து, ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கோர முகத்தை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டியுள்ளனர்.

ஈராக்கில் தனி அரசு கேட்டு ஆயுதப் போராட்டம் நடத்தி வரும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.

தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிணைக்கைதியாக இருந்த அமெரிக்கப் பத்திரிகையாளர்களான ஸ்டீவன் ஸ்காட்லாப் மற்றும் ஜேம்ஸ் ஃபோலே ஆகியோர் தலை துண்டித்து கொல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

மேலும் தாக்குதல் தொடர்ந்தால், தங்களிடம் பிணைக் கைதியாக உள்ள பிரிட்டன் நாட்டை சேர்ந்த டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரின் தலையும் துண்டிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.

W02இந்நிலையில் நேற்று ஹெயின்ஸ் தலை துண்டித்து கொல்லப்படும் காணொளியை அவர்கள் வெளியிட்டு உலகை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர். ஹெயின்சின் தலையை துண்டிக்கும் தீவிரவாதி, அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தால் இது தான் நடக்கும் என்று எச்சரித்துள்ளான்.

பாதுகாப்பு நிபுணரான ஹெயின்ஸ் கடந்த 2013-ம் ஆண்டு சிரியாவில் வேலை செய்தபோது காணாமல் போனார். அவருக்கு 17 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.