Home உலகம் மும்பை தாக்குதல் தீவிரவாதி பாகிஸ்தானில் நடமாட்டம் – இந்தியா கடும் கண்டனம்!

மும்பை தாக்குதல் தீவிரவாதி பாகிஸ்தானில் நடமாட்டம் – இந்தியா கடும் கண்டனம்!

651
0
SHARE
Ad

Indiaபுதுடில்லி,  செப்டம்பர் 18 – இந்தியாவில் கடந்த 2008-ம் மும்பையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக இருந்த ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சையது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுவது குறித்து இந்தியா, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் லாகூரில் முழு சுதந்திரத்துடன் சுற்றித்திரிவதாக தெரிவித்து இருந்தார்.

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹபீஸை பிடித்துக் கொடுக்க பாகிஸ்தானிடம் பலமுறை இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், அந்நாட்டு தூதர் இவ்வாறு கூறியிருப்பது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறுகையில், “பாகிஸ்தானில் ஹபீஸ் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாததால் அவன் மீது எந்தவித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்று பாசித் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

பாகிஸ்தான் நாட்டு குடிமகனாக இருப்பதால் தான் மும்பை தாக்குதலுக்கு காரணமான அவனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகின்றது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், மும்பை தாக்குதலில் ஹபீஸ் சையதிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களில் 99 சதவீதம் பாகிஸ்தானிடம் தான் உள்ளது. அதற்கான காரணம், மும்பை தாக்குதல் தொடர்பான திட்டங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் தீட்டப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை என்று அவர் கூறியுள்ளார்.