Home நாடு மாஸ் விமானம் ஐஸ்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதா?

மாஸ் விமானம் ஐஸ்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதா?

491
0
SHARE
Ad

MAS PLANEகோலாலம்பூர், செப்டம்பர் 18 – மாஸ் விமானம் எம்எச் 131 ஐஸ்லாந்தில் அவசரமாக தரையிறக்கப் பட்டதாக இணையத் தளம் ஒன்றில் வெளியான செய்தியை மலேசிய ஏர்லைன்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இத்தகைய விஷமத்தனமான செய்தியை வெளியிட்டவேர்ல்ட் நியூஸ் டெய்லி ரிப்போர்ட் என்ற அந்த இணையதளத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மலேசிய ஏர்லைன்ஸ் வலியுறுத்தி உள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று இக்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியான செய்தியில், பாரீஸ் நகரிலிருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸின் போயிங் 777 ரக விமானம், பர்தார்புங்கா எரிமலையின் மீது பறந்தபோது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பம் மற்றும் எரிமலை துகள்கள் காரணமாக விமானத்தின் இயக்க கட்டமைப்பு பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாகவே ஐஸ்லாந்தில் அது அவசரமாக தரையிறங்க நேரிட்டது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

கனன்று கொண்டிருக்கும் எரிமலையின் மேலே பறக்க வேண்டாம் என அனைத்துலக
விமானப் போக்குவரத்து ஆணையம் விடுத்த எச்சரிக்கையையும் மீறி, அக்குறிப்பிட்ட விமானத்தின் விமானி எரிமலைப் பகுதியின் மேலே பறக்குமாறு உத்தரவிடப்பட்டதாக அந்த இணையதள செய்தி மேலும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தச் செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மலேசிய ஏர்லைன்ஸ்,  இத்தகைய அப்பட்டமான பொய்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

“கோலாலம்பூர் – பாரீஸ் வழித்தடத்தில், மலேசிய ஏர்லைன்ஸ், ஏர்பஸ் 380 ரக
விமானத்தைதான் இயக்குகிறது என்பது பரவலாக பலரும் அறிந்த விஷயம். மேலும்
நியூயார்க் அல்லது வேறு எந்த அமெரிக்க நகருக்கும் இந்த வழித்தடத்தில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்குவதில்லை. எம்எச் 131 என்ற குறியீட்டு எண் கோலாலம்பூர் மற்றும் ஆக்லாந்து (நியூசிலாந்து) வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது,” என்றும் மலேசிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.