Home கலை உலகம் ‘ஐ’ பாடல்களை பின்னுக்கு தள்ளி ‘கத்தி’ பாடல்கள் சாதனை!

‘ஐ’ பாடல்களை பின்னுக்கு தள்ளி ‘கத்தி’ பாடல்கள் சாதனை!

588
0
SHARE
Ad

kaththiசென்னை, செப்டம்பர் 19 – இந்த தீபாவளி ரசிகர்களுக்கு பெறிய விருந்து உள்ளது. ஐ, கத்தி என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் திரைக்கு வரயிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் ‘ஐ’ படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக வெளிவந்து ஐடியுன் என்ற இணையத்தளத்தில் முதலிடம் பிடித்தது. தற்போது ‘கத்தி’ திரைப்படத்தின் பாடல்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.

வெளியான சில மணி நேரங்களிலேயே  பலர் பயன்படுத்து ஐடியூன்ஸ் இணையதளத்தில், இப்படத்தின் பாடல்கள்  இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து ‘ஐ’ பாடலை பின்னுக்கு தள்ளியது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு அனிருத் இசையமைத்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான் கரத்தே, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களும் ஐடியுன் இணையத்தளதில் இடம்பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.