இதுவரை போகோஹரம் நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நுழைந்த மர்மநபர்கள், அங்கு வெடி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் அங்கிருந்த 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.