Home கலை உலகம் மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்ட அமீர்கான்!

மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்ட அமீர்கான்!

579
0
SHARE
Ad

aamirkhanநியூடெல்லி, செப்டம்பர் 20 – ராஜ்குமார் ஹிஜானி இயக்கத்தில் அமீர்கான் ‘பி.கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சுவரொட்டியில் அமீர்கான் நிர்வாணமாக இருந்ததால், அந்த சுவரொட்டியை எதிர்த்து போராட்டங்கள் நடந்தது.

அதேபோல் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அமீர்கானால் இன்னொரு பிரச்சனை எழுந்துள்ளது. பி.கே. படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள கோவிலில் நடத்தினர்.

கோவிலுக்குள் செல்லும் போது அமீர்கான் தவிர எல்லோரும் செருப்பை கழற்றி வைத்து விட்டு சென்றுள்ளனர். செருப்புடன் வந்த அமீர்கானை பார்த்ததும் அங்கிருந்த பக்தர்கள் ஆத்திரம் அடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக இந்து அமைப்பினர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அமீர்கானின் இந்த செயல் இந்துக்களை அவனதிப்பதாகவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என சினிமா வட்டாரங்கள்  தெரிவித்தன.