Home உலகம் ஒட்டுமொத்த இணைய சேவைகளில் இருந்து விலகிக் கொள்ள ரஷ்யா முடிவு! 

ஒட்டுமொத்த இணைய சேவைகளில் இருந்து விலகிக் கொள்ள ரஷ்யா முடிவு! 

570
0
SHARE
Ad

putinமாஸ்கோ, செப்டம்பர் 22 – இணையச் சேவைகளில் இருந்து தங்கள் நாட்டை முற்றிலும் துண்டித்துக் கொள்ளும் முடிவில் ரஷ்யா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவுடனான அந்நாடுகளின் தொடர்பு முற்றிலும் அற்றுப்போனது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டை உளவு பார்க்க இணையத்தை பயன்படுத்துவதாக ரஷ்யா கருதுகின்றது.

இதனைத் தொடர்ந்து, தங்கள் நாட்டை இணையச் சேவைகளில் இருந்து முற்றிலும் விடுவித்துக் கொள்ளும் முடிவினை அந்நாட்டின் அதிபர் புதின் எடுத்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

இணைய உலகில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அனைத்து தொழில்நுட்பமும் அமெரிக்காவைச் சேர்ந்தவை. ‘கூகுள்’ (Google),  ‘மைக்ரோசாப்ட்'(microsoft), ‘ஆப்பிள்’ (Apple) உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டு அமெரிக்கா ரஷ்யாவை உளவு பார்க்க முன்று வருவதாக ரஷ்யா கருதுகின்றது. இதன் காரணமாகவே ரஷ்யா இந்த முடிவினை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ரஷ்யாவின் இந்த முடிவு சாத்தியமா என்றால் சாத்தியம் என்றே வல்லுனர்களால் கூறப்படுகின்றது. சீன அரசு அமெரிக்காவின் உளவு நடவடிக்கைகளில் இருந்து தன்கள் நாட்டை பாதுகாக்க ஆப்பிள், ஐபிஎம், மைக்ரோசாப்ட், பேஸ்புக், யூட்யூப் போன்ற தொழில்நுட்பங்களை தங்கள் நாட்டிற்குள் எவ்வாறு முடக்கி உள்ளதோ, அதே போன்று ரஷ்யாவும், ஒட்டுமொத்த இணையச் சேவைகளுக்கான தொழில்நுட்பங்களிலிருந்து பின்வாங்கிக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர்.