Home நாடு யூபிஎஸ்ஆர்: கணிதம் மற்றும் தமிழ் பாடங்களுக்கு அக்டோபர் 9 மறுதேர்வு

யூபிஎஸ்ஆர்: கணிதம் மற்றும் தமிழ் பாடங்களுக்கு அக்டோபர் 9 மறுதேர்வு

711
0
SHARE
Ad

UPSR 2014கோலாலம்பூர், செப்டம்பர் 23 – கணிதம் மற்றும் தமிழ்ப் பாடங்களுக்கான யூபிஎஸ்ஆர் மறுதேர்வுகள் வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு வாரியம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கணித தேர்வு தாள்கள் 015, 025 மற்றும் 035 ஆகியவை தேர்வுக்கு முன்பே முறைகேடாக வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழ் தேர்வுதாள்கள் 036, 037 ஆகியவை வெளியானதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதி யூபிஎஸ்ஆர் மாணவர்கள் எழுதிய கணிதம் மற்றும் 10ஆம் தேதி எழுதிய தமிழ் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் மேலும் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 9ம் தேதி நடைபெற்ற கணிதத் தேர்வை சுமார் 4 இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்களும், 10ஆம் தேதி நடைபெற்ற தமிழ் தேர்வை சுமார் 18 ஆயிரம் மாணவர்களும் எழுதியிருந்தனர்.

“புதிய தேர்வுதாள்களை அச்சடிக்க தேவைப்படும் கால அவகாசம், இதர நடைமுறைகள், ஹரிராயா விடுமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் மற்ற அனைத்துத் தரப்பினரும் எதிர்கொள்ளும் சங்கடங்களுக்காக வருந்துகிறோம்,” என கல்வித்துறை பொது இயக்குநர் டத்தோ டாக்டர் காயிர் முகமட் யூசுப் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.