Home கலை உலகம் பிரபல இந்தி நடிகர் சசிகபூர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல இந்தி நடிகர் சசிகபூர் மருத்துவமனையில் அனுமதி

600
0
SHARE
Ad

மும்பை, செப்டம்பர் 23 – பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார். இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பதாக அவர் கூறியதையடுத்து 76 வயதான அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

Shashi Kapoor Young photo

சசிகபூர் அன்றைய இளமைத் தோற்றம்….

#TamilSchoolmychoice

அவருக்கு இருதயத் தொற்று இருப்பதாகவும், தற்போது அவசர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் திருபாய்
அம்பானி மருத்துவமனையின் செயல் இயக்குநரான மருத்துவர் ராம் நாராயண்
தெரிவித்தார்.

சுமார் 160 படங்களுக்கும் மேல் நடித்துள்ள உலகப்புகழ் பெற்ற கலைஞரான சசிகபூர், பிரபல நடிகர் ராஜ்கபூரின் இளைய சகோதரர் ஆவார். மூன்று முறை இந்திய தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர்.

கடந்த 2010ஆம் ஆண்டு ‘ஃபிலிம்பேர்’ இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
வழங்கி கௌரவித்தது.

சசிகபூருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மனைவி ஜெனிஃபர் கென்டல் காலமாகிவிட்டார்.

ராஜ்கபூர் சகோதரர்களிலேயே அழகான தோற்றத்தோடு திகழ்ந்தவர் சசிகபூர். ஜீனத் அமனுடன் ‘சத்யம் சிவம் சுந்தரம்’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

Shashi Kapoor Actor current photo

சசிகபூர் இன்றைய தோற்றம்….