Home வாழ் நலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவுகள்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவுகள்!

1169
0
SHARE
Ad

vegசெப்டம்பர் 23 – உடலின் ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை செய்ய சில முக்கிய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உடலின் நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையான முறைகளில் மட்டுமே அதிகரிக்க முடியும் என்பது. இயற்கையான முறை என்றால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இரு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகளை உண்ணுவது.

நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் இருந்தால் பெரும்பாலான நோய்களைத் தவிர்த்துவிடலாம்.

#TamilSchoolmychoice

உடம்பின் நோயெதிர்ப்பு சக்தி வலுவுடன் இருக்கும் போது, ஹார்மோன் மற்றும் எதிர்மறை அணுக்களை கட்டுப்படுத்தும் திறன் அதிமாக இருக்கும்.

இந்த குறிப்பிட்ட உணவுகளை உண்ணுவது ஆரோக்கியமாகவும், நோய்களின்றியும் வாழ சிறந்த வழியாகும். அப்படி சில உணவுகளை பார்ப்போம்.

garlicபூண்டு:

பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது பூண்டு.

எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.

gingerஇஞ்சி:

நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.

curdதயிர்:

தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.

eggமுட்டை:

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளில் அடுத்ததாக வருவது முட்டை. இவற்றில் பல வைட்டமின்கள், குறிப்பாக நோய்களுடன் போராடும் வைட்டமின் டி, பாலுணர்வைத் தூண்டும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் கொண்டது.

PEPPAR Tடீ மற்றும் காபி:

டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே முளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. உண்மையில், காபியும் டீயும் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்கவல்லவை.

cocoதேங்காய்:

தேங்காய் எண்ணெயும் தேங்காயும் பெருமளவு ஆரோக்கியமான பண்புகளைக் கொண்டவை. இதிலுள்ள லாரிக் அமிலம் உடலில் சென்று மோனோலாரினாக மாற்றமடைந்து விடும்.

நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றால், மோனோலாரின் என்ற பொருள் தாய்ப்பாலில் அதிகம் உள்ளதுடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் வலுப்படுத்த உதவுகிறது.

food3முட்டைக்கோஸ்:

இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.

lemonஎலுமிச்சம் பழம்:

எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.