கோலாலம்பூர், செப்டம்பர் 23 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று ‘ஹீரோ’ விருது வழங்கப்பட்டது.
மலேசியாவில் குழந்தைகளின் ஆரம்ப கல்வி மற்றும் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியதற்காக ரோஸ்மாவிற்கு, எஸ்டிஇஎம் ( Science, Technology, Engineering and Mathematics – STEM) என்று அழைக்கப்படும் க்ளோபல் எஸ்டிஇஎம் என்ற நிறுவனத்தால் இந்த அனைத்துலக விருது வழங்கப்பட்டுள்ளது.
நியூயார்க் அறிவியல் கழகத்தின் தலைவர் நான்சி சிம்பெர் இந்த விருதை இன்று ரோஸ்மாவிற்கு வழங்கி கௌரவித்தார்.
இந்த விருதளிப்பு விழாவில் பிரதமர் நஜிப் துன் ரசாக், நியூயார்க் அறிவியல் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி எலிஸ் ரூபென்ஸ்டெயின் மற்றும் உலகக் கருத்தரங்குகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த அமீர் டோசல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரோஸ்மாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது குறித்து கருத்துரைத்த நஜிப், தனது மனைவியைக் கண்டு தான் பெருமையடைவதாகக் கூறியுள்ளார்.