‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்தவர் பிரியா. ‘நான் மகான் அல்ல’, ‘சிங்கம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இத்திருமணம் குறித்து அட்லி கூறுகையில், “பிரியாவை எனக்கு ‘கனா காணும் காலங்கள்’ பார்க்கும்போதே பிடிக்கும். சிவகார்த்திகேயன் என் நண்பன். அவனைப் பார்க்க ‘ஜோடி நம்பர் ஒன்’ அறைக்கு அடிக்கடி செல்வேன். அவன் மூலமாகத்தான் நானும் பிரியாவும் நண்பர்களாக மாறினோம் ” என்றார் அட்லி.
இது குறித்து பிரியா கூறுகையில், “எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறாங்கன்னு அட்லியிடம் கூறினேன். “என் ஜாதகம் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார். நான் விளையாட்டாக கூறுகிறார் என நினைத்தேன். ஒரு வேளை உண்மையாக இருக்குமோ என்று நினைத்து எங்க வீட்டில் வந்து பேசச் சொன்னேன். இப்போ இரண்டு பேர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தார்கள். வரும் நவம்பர் 9-ம் தேதி எங்களுக்குத் திருமணம் நடக்கவுள்ளது. அனைவரும் வாருங்கள்” என சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார் பிரியா.