Home நாடு கே.பாலமுருகனின் ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ – நாவல் வெளியீடு!

கே.பாலமுருகனின் ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ – நாவல் வெளியீடு!

969
0
SHARE
Ad

Balamurugan 2

சுங்கை பட்டாணி, செப்டம்பர் 24 – கெடா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஆசிரியருமான கே.பாலமுருகன் (படம்) சிறுவர்களுக்கென பிரத்தியேகமாக எழுதிய “மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்” என்ற மர்ம நாவல் வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 20-ம் தேதி சனிக்கிழமை, சுங்கை பட்டாணியிலுள்ள கார்னிவல் வாட்டர் டீம் பார்க் என்ற இடத்தில் நடைபெற்றது.

Balamurugan 4

#TamilSchoolmychoice

இந்த விழாவில் நாட்டின் முக்கிய எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழாவிற்கு கெடா மாநில கல்வி இலாகாவின் மொழிப்பிரிவு உதவி இயக்குநர் திரு.பெ.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.

Balamurugan 3

அதே வேளையில், நாவலின் முதல் பிரதியை கே.பாலமுருகனின் தாயார் பெற்றுக் கொண்டே அவரை ஆசீர்வதித்தார்.

Balamurugan 1

(நாவலின் முதல் பிரதியை பாலமுருகனின் தாயார் கருப்பாயி பெற்றுக் கொள்கிறார்)

மேலும், ‘மர்மக் குகையும் ஓநாய் ,மனிதர்களும்’ நாவலின் ஓவியர் கலைவாணி, 15 நாட்களில் மொத்தம் 15 ஓவியங்களைச் சிரமப்பட்டு வரைந்து கொடுத்தார்.

அவரை மிகச் சிறந்த ஓவியர் என்று நாவல் வெளியீட்டு விழாவில் பாராட்டியதோடு, பாலமுருகன் அவருக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

Balamurugan

(பாலமுருகன் ஓவியர் கலைவாணிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார்)

இந்த விழாவில் பாலமுருகன் பேசுகையில், இன்றைய காலத்தில் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் மொழியை விட, அவர்களுடன் ஒரு சக நண்பனாக பயணிக்கும் ஒரு மொழியை தான் விரும்புகின்றார்கள். அப்படிப்பட்ட ஒரு மொழிக்குள் தான் நுழைய வேண்டும்.அதற்கான தொடக்கமாக இந்த நாவல் அமையும் என்றும் தெரிவித்தார்.