வாஷிங்டன், செப்டம்பர் 27 – எபோலா நோய் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக வங்கி 170 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அளித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் கடுமையாகப் பரவிய உயிர் கொல்லி நோயான எபோலாவிற்கு இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மருந்து உதவிகள் சரியாக கிடைக்காத நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், அந்த நாடுகளில் நோய் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து பணிகளையும் நனைத்துலக மருத்துவ குழு மேற்கொண்டு வருகின்றது.
எனினும், அங்கு தேவையான சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்காக, உலக வங்கி அந்நாடுகளுக்கு தேவையான நிதி உதவியினை வழங்கி வருகின்றது.
ஏற்கனவே இந்நாடுகளில் எபோலா நோய் பரவாமல் தடுக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சேவைக்காக உலக வங்கி சுமார் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அளித்துள்ள குறிப்பிடத்தக்கது.