Home இந்தியா ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜராகிறார்!

ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜராகிறார்!

678
0
SHARE
Ad

Ram Jethmalaniசென்னை, செப்டம்பர் 29 – சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜராகவுள்ளார்.

இந்த வழக்கில் ஆஜராக லண்டனில் இருந்து  ராம்ஜெத் இன்று இந்தியா செல்லவுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராகவும், ஜாமீன் வழங்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

#TamilSchoolmychoice

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில், முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா அறிவித்தார்.

அவர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்தார்.

இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.